மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: மம்தா கட்சி அபார வெற்றி


மே.வங்கம்: மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட், திரிணாமுல், காங்கிரஸ் இடையே பல இடங்களில் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் கொல்கத்தா மாநகராட்சியை மார்க்சிஸ்ட் கட்சியிடமிருந்து பறித்தது திரிணாமுல் காங்கிரஸ்.
மேலும் கொல்கத்தாவில் மொத்தம் உள்ள 191 வார்டுகளில் 93 வார்டுகளை திரிணாமுல் கட்சி கைப்பற்றியுள்ளது. மேற்கு வங்கத்தில் 81 நகராட்சிகளில் 50 இடங்களில் மம்தா கட்சி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.

மார்க்சிஸ்ட், திரிணாமுல் இடையிலே ஏற்பட்ட இழுபறியில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதால் உள்ளாட்சி தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திரிணாமுல் வெற்றி பெற்றதையடுத்து திரிணாமுல் கட்சி மீது மக்கள் அபரிமித நம்பிக்கை வைத்துள்ளனர் என மம்தா பானர்ஜி தனது கருத்தை தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments