ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா வெற்றி


தம்புலா: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை தொடர் லீக் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றது.



இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், தம்புலாவில் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டியில் "டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி, "பேட்டிங் தேர்வு செய்தார்.இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. பாகிஸ்தான் அணியில் முகமது ஆசிப், ஷாஜெய் ஹசனுக்குப்பதில் இம்ரான் பர்கத், சயீது அஜ்மல் இடம் பெற்றனர்.



சல்மான் அபாரம்:பாகிஸ்தான் அணிக்கு இம்ரான் பர்கத், சல்மான் பட் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். இம்ரான் பர்கத் (25), சோயப் மாலிக் (39), கேப்டன் அப்ரிதி (32) ஆகியோர் ஓரளவுக்கு கைகொடுத்தனர். சல்மான் பட் 74 ரன்களும், கம்ரான் அக்மல் 51 ரன்களும் எடுத்தனர். இறுதியில்பாகிஸ்தான் அணி, 49.3 ஓவரில் 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய தரப்பில் பிரவீண் குமார் 3, ஜாகிர்கான், ஹர்பஜன் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.



காம்பீர் அபாரம்: இதன் பின்னர் 268 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் சேவக் 10 ரன்களுக்கு அவுட்டானார். கோக்லி 18 ரன்களுக்கு அவுட்டானார். இதன் பின்னர் கேப்டன் தோனி கவுதம் காம்பீர் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. காம்பீர் 83 ரன்களை குவித்து அஜ்மல் பந்தில் போல்டானார்.



தோனி 57 : காம்பீர் அவுட்டான பின் களமிறங்கிய ரோகித் சர்மா தோனியுடன் ஜோடி சேர்ந்தார். தோனி 57 ரன்களுக்கும் ரோகித் சர்மா 22 ரன்களுக்கும் அவுட்டாயினர்.



இந்தியா வெற்றி: கடைசி ஓவரில் இந்திய அணிக்கு 7ரன் தேவைப்பட்டது. காம்பீர், ஹர்பஜர் களத்தில் இருந்தனர். ஆட்டத்தின் இரண்டாவது பந்தில் காம்பீர் ரன் அவுட்டானார். இதனால் ஆட்டம் பரபரப்பானது. 3வது பந்தில் பிரவீன் குமார் இரண்டு ரன் எடுத்தார். நான்வது பந்தில் மீண்டும் ஒரு ரன் எடுத்தார். 5வது பந்தில் ஹர்பஜர் சிக்சர் அடித்து வெற்றி பெற செய்தார். இறுதியில் இந்திய அணி 49.5ஓவரில் ஆறுவிக்கெட் இழப்பிற்கு 271ரன் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Post a Comment

0 Comments