"சுதந்திரமாக முடிவு எடுப்போம்' :இலங்கை மந்திரி பெரிஸ் தகவல்

கொழும்பு : "தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்த விஷயத்தில், இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு எந்தவிதமான நெருக்கடியும் தரப்படவில்லை' என, இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் கூறினார். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் இந்திய சுற்றுப்பயணம் குறித்து, இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் கூறியதாவது:அதிபர் ராஜபக்ஷேவின் இந்திய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்தது. இலங்கை தமிழர் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காணும்படி, இந்தியாவிடம் இருந்து, எங்களுக்கு எந்தவிதமான நெருக்கடியும் தரப்படவில்லை. இந்த விஷயத்தில் சுதந்திரமாக முடிவு எடுக்கும் உரிமை இலங்கைக்கு உள்ளது. இதற்கு இந்தியா உதவும்.இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மிகவும் பலமாக உள்ளது. அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்த தமிழக எம்.பி.,க்கள், தமிழர் பிரச்னைக்கான அரசியல் தீர்வு, சட்டத் திருத்தம் மற்றும் பொருளாதார பிரச்னைகள் குறித்து பேச்சு நடத்தினர்.போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்டித் தருவது உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்வதாக இந்தியா உறுதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவை அமைப்பதற்கு உதவுவதாகவும் இந்தியா சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பெரிஸ் கூறினார்

Post a Comment

0 Comments