சமய சஞ்சீவனி - இரா. பிரேம் குமார்





வற்றாத ஜீவ நதியாம் எங்கள் பொருணை நதியின் வண்டல் மிகுந்த பாசன பகுதியை கொண்ட வளமான தென் தமிழ்நாடில், மிக சிறப்பாக ஆட்சி நடத்தி கொண்டிருந்த, வீர தமிழ் அரச பரம்பரைஐ சேர்ந்த அரசன் ஒருவன் இருந்தான். அவன் தன் ஆட்சியில் எந்த வித கவலையும் இல்லாமல் தமிழ் மக்கள் சிறப்பாக வாழ்வதை எண்ணி மகிழ்ச்சியோடு , தன் ஆட்சியின் சிறப்பை எண்ணி எண்ணி ஆனந்த கூத்தாடினான். தன் அமைச்சரவை சகாக்களிடமும் அதை பற்றி பல நாள் பல முறை கூறி தன் திறமையான நிர்வாகத்தின் மேன்மையை பற்றி தானே பொறாமை பட்டுகொண்டான். இப்படி பல ஆண்டுகள் உருண்டோடின. 




 ஓர் நாள், தன் வழக்கமான் அரச வேலைகளை முடித்துக்கொண்டு, இரவு தன் மனைவி மைந்தரோடு உரையாடிவிட்டு, தன் படுக்கையில் சென்று உறங்குவதுக்கு முன் நெல்லையப்பரை ஒருமுறை நினைத்து தன் இரு கண்களையும் மூடி "இறைவா !!!!! உனது அருளால் என் ஆட்சியில் தமிழ் மக்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருகிறார்கள், அதற்க்கு எனது நன்றிஏய் உன் பாத கமலங்களில் உரித்தாக்குகிறேன். மேலும் இதே நிலையை தொடர எனக்கும் என் அமைச்சரவை சகாக்களுக்கும் நீண்ட ஆயுளை கொடுத்து அருள வேண்டும். நெல்லை வாழ் என் அப்பனே !!! அருள் புரிய வேண்டும் !!! ." என்று தன் நன்றிஏய் தெரிவித்துவிட்டு உறங்க சென்றான்.

 ஆனால் அன்றைய தினம் அவனால் உறங்க முடியவில்லை, தன் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத கவலை ஒன்று தொற்றிகொன்டத்தை அவனால் உணர முடிந்தது. படுக்கையில் உறக்கம் இன்றி தவித்தான். இது என்ன, எந்த வித கவலையும் இன்றி வாழ்ந்த எனக்கு ஏன்?? இந்த இனம் புரியாத மன வாட்டம் என்று அவன் மனதில் ஓர் போராட்டமே உருவாகியது. தூக்கம் இன்றி தவித்த அம்மன்னன் தன் படுக்கையில் இருந்து எழுந்து, தன் பட்டமகிசியிடம் சென்று தன் மனதில் துவங்கிவிட்ட போரட்டத்தின் காரணத்தை கூறும்படி கேட்டு கொண்டான். அதற்க்கு அந்த மாதர் குல திலகம் " மகாபிரபுவே !!!! பொருணை நதி கரையை கொண்டவனே !!!!!! தென் தமிழ் நாடு தவம் இருந்து ஈன்றெடுத்த வீர புதல்வனே !!!! இது என்ன கலக்கம் !!! சாணக்கியனை வெல்லும் திறம் கொண்ட அரசவை கொண்டவனே !!!, கலக்கத்தை விடுங்கள் நாளை நாம் அரசவையில் நம் மந்த்ரிமார்களிடம் கலந்துறையடினால் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்து விடுமே!!!! கலங்காமல் உறங்குகள்!!! என்று கூறினாள். உடனே அரசன்னுக்கு தன் கவலையின் காரணம் புரிந்தது, பாலுக்கு தவித்த குழந்தைக்கு பால் கிடைத்து விட்டால் எப்படி ஒரு புன்னகை புரியோமோ அப்படி ஒரு முக மலர்ச்சி கொண்டான். தன் தேவியிடம் " தேவியே !!! என் குல பெருமை காக்க வந்த அழகு தெய்வம்மே !!!! என் தமிழ் மக்கள் நல் வாழ்வே தன் வாழ்வு என்று வாழ்ந்து கொண்டு இருக்கும் என் தேவியே !!!!! உன் பொன்னான வார்த்தைகள் என் மன வாட்டத்தை போக்கிவிட்டன , நாளை நான் மந்த்ரி சபையில் என்ன ஆலோசனை செய்வது என்று விளங்கிவிட்டது !!!! நன்றி தேவி " என்று கூறிவிட்டு தன் படுக்கைக்கு சென்றான். 

 அவன் மனது இப்பொழுது அமைதியாக இருந்தது, கார் காலத்தில் முழு சந்திரனை விரைவாக மறைக்கும் கரிய மேக கூட்டத்தை போல நித்ராதேவி அவனை ஆட்கொண்டாள். 

மன்னர்களின் நிலை எவ்வளவு கொடியது என்று நினைக்கையில் நமக்கு நெஞ்சு கனக்கிறது. மன்னராய் பிறப்பது சாபமா அல்லது வரமா என்று கேட்க தோன்றுகிறது. எவ்வளவு செல்வம் , புகழ் , ஆட்சி , அதிகாரம், படை இருந்தாலும் கவலை என்பது அவர்களை விட்டதாக தெரிய வில்லை. ஆட்சியை காப்பாற்ற , தன் மக்களை காப்பாற்ற , தன் மனைவி மைந்தரை காப்பாற்ற என்று அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கவலை கொண்டு தான் வாழ்கின்றார்கள். அதனால் தான் நிறைய மன்னர்கள் துறவறம் பூண்டுவிடுகிரார்கள் போலும். 

 மன்னாதி மன்னர் !!!! தமிழ் தாய் ஈன்றெடுத்த வீர வீராதி வீரர் !!! பொருணை நதியின் செல்வர் !!! எமது தென் தமிழ் நாட்டின் தவ புதல்வர் !!! பராக்!! பராக் !!! பராக் !!! என்ற விண்ணதிரும் முழக்கத்தின் நடுவே நம்மன்னர் தன் பட்டமகிசியுடன் அரியணையில் அமர்ந்தார். அவரை தொடர்ந்து அமைச்சர் பெருமக்களும் , சேனைத்தலைவர்களும் , பார்வையாளர் பகுதியில் நாட்டுமக்களும் அவரவர் இருக்கையில் அமர்தனர். முதலமைச்சர் எழுந்து அன்றைய தினம் செய்யவேண்டிய அவையின் அலுவல்களை கூற முற்பட்டார். அப்பொழுது மன்னர் முதலமைச்சரை பார்த்து " அமைச்சரே !!! இன்றைய தின அலுவல்களை சற்று நிறுத்தி வையுங்கள், நான் அரசவையில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்" என்றார். உடனே முதல் அமைச்சர் " மகாபிரபு !!! அப்படியே ஆகட்டும் !!!" என்று கூறி அமர்ந்தார். " பெரியோர்களே !!! என் குல பெரும்மைஅய் காத்து கொண்டுவரும் என் அமைச்சர் பெருமக்களே !!! சேனைதளைவர்களே !!! என் உயிரின் மேலான என் தமிழ் மக்களே !!! எனது வணக்கங்களை உரித்தாக்குகிறேன். பொருணை நதியின் வளத்தினாலும், இயற்கை அன்னையின் கருணையினாலும், நெல்லையப்பரின் வற்றாத அருளினாலும் எனது ஆட்சியில் தமிழ் மக்கள் நலமாக, அமைதியாக வாழ்கின்றார்கள். ஆனால் இதை எப்படி சாதிக்க முடிந்தது??? என் படைபலத்திநாலா? , எனது திறமையின் காரணமா? , என் முன்னோர்கள் செய்த புண்ணியமா ? என்று எண்ணி பார்கையில் அவை அல்ல என்று எனக்கு புலப்பட்டது. அதற்க்கு காரணம் சாணக்கியனை வெல்ல கூடிய மதி நுட்பம் கொண்ட , நாட்டு மக்கள் மேல் அக்கறை கொண்ட அவையோரை பெற்றதனால்தான் என்று என் தேவியின் முலமாக தெரிந்துகொண்டேன்.

 ஆகையினால் என் மனதில் ஏர்பட்டிருக்கும் ஒரு கவலைஅய் போக்கும் தன்மை இந்த அவைக்கு மட்டுமே உண்டு என்று எண்ணுகிறேன் " என்றார் நம்மன்னர். உடனே முதலமைச்சர் எழுந்து " மன்னர்மன்னா !!!! உங்கள் ஆட்சியில் நாடு முழுதும் ஆனந்த கூத்தாடும் பொழுது, எங்கள் இதையத்தின் தெய்வமாக விளங்கும் உங்கள் மனதில் ஒரு கவலையா? அதனை உடனே இந்த மாமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் அதை போக்குவதை தவிர எமக்கு வேறு அலுவல்கள் இல்லை என்று கூறுகிறேன் " என்றார். அதற்கு மன்னர் " முதல் அமைச்சரே !!!! என் நல் ஆட்சியின் காரணம் எமது அமைச்சர் பெருமக்கைளின் சிறந்த ஆலோசனைகளே காரணம் என்பது என் எண்ணம். ஆனால் நாம் அனைவரும் சாகா வரம் பெற்றவர்கள் அல்ல. நமக்கும் ஒரு நாள் இறப்பு என்பது இயற்கையே. ஆகவே !!! நீங்கள் என் அருகிலேயே எப்பொழுதுமே இருக்க வேண்டும் என்று நான் எண்ண முடியுமா ??? முடியாது அல்லவா. அதனால் எந்த காலத்திலும், எந்த நேரத்திலும் எனக்கு நல்ல ஆலோசனை வழங்க கூடிய ஒரு மந்திரத்தை எனக்கும், என் வம்சம்துக்கும் அருள வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். அப்படி பட்ட மந்திரம் எனக்கும் என் குல மன்னர்களுக்கும் சமய சந்ஜீவனியாய் இருக்க வேண்டும்" என்றார் மன்னர். இதை கேட்ட உடன் அவையோர் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். முதலமைச்சர் எழுந்து " மன்னர்மன்னா !!! இவுலகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன அத்தனைக்கும் ஒரு மந்திரமா??? அணைத்து சாஸ்திர சம்பிரதயங்களையும் கற்ற வல்லுனர்களும்க்கும், பெரியோர்களுக்கும், இந்த அவையோருக்கும் இது ஒரு சவாலே ஆகும். ஆனால் நாங்கள் பயின்ற எந்த மொழியிலும் அப்படி ஒரு மந்திரம் இருப்பதாக தெரியவில்லையே. ஆகையால் இந்த விடயத்தை தயை கூர்ந்து மறந்து விடுங்கள் !!! " என்று கூறினார். உடனே மன்னர் " முதலமைச்சரே !!! எப்பேர் பட்ட பிரச்னையும் திறம்பட தீர்க்க கூடிய நீங்களா ??? அப்படி கூறுவது. முடியாது எனக்கு அப்படி பட்ட ஒரு மந்திரம் தேவை, வேண்டும் என்றால் மேலும் அவகாசம் எடுத்து கொள்ளுங்கள் !!! என் விருப்பத்தை என் கட்டளையாக நாடு முழுவதம் பறை சாற்றுங்கள்" என்று கூறிவிட்டு அவையில் இருந்து எழுந்து சென்றார். அமைச்சர் பெருமக்களும் என்ன செய்வது என்று தெரியாமல் அவையில் இருந்த வீடு திரும்பினர். நாடு முழுவதும் பறை சாற்ற பட்டது நாட்டு மக்கள் அனைவரும் திகைத்து நின்றார்கள். மன்னனுக்கு பித்து பிடித்ததோ என்று எண்ணி துக்கத்தில் ஆழ்ந்தனர். இப்படியும் சில ஆண்டுகள் உருண்டோடின. அப்பொழுது தென் தமிழ் நாட்டிற்கு தென் பகுதியில் உள்ள ஒரு தீவில் இருந்த ஒரு வறியவர் தன் குடும்பத்தாருடன் பிழைப்பு தேடி பொருணை நதி கரையோரமாக வந்து கொண்டிருந்தார். அவர்க்கும் நம்மன்னனின் கட்டளை எட்டியது. உடனே அவர் இந்த அற்ப விடயத்துக்காகவா தென் தமிழகம் துக்கத்தில் ஆழ்ந்துகிடக்கிறது என்று எண்ணி கொண்டு தன் மனைவியிடம் " கருப்பாயி !!!! வாழ வழி கிடைத்து விட்டது !!! ஒரு வேலை சோறு அல்ல மாட மாளிகையில் வாழும் யோகம் கிடைத்துவிட்டது !!!! எல்லோரும் பொருணை ஆற்று தண்ணிரை அருந்திவிட்டு !!! அதோ அந்த ஆலமரத்தடியில் உறங்குங்கள் !!! நான் என்னுடைய சமய சந்ஜீவணியை இந்த நாட்டு மன்னனிடிம் வழங்கி விட்டு !!! பொன்னும் பொருளும் பெற்று விட்டு வருகிறேன்" என்று கூறி. பல நாள் பட்டினியால் வாடிய புலி இறையை கண்டால் எப்படி பாயிந்து செல்லுமோ அப்படி பாயிந்து சென்றார். முதல் அமைச்சர் தன் கண்களை நம்ப மறுத்தார், சமய சஞ்சீவனி கொண்டு வந்தவன் இவனா. செம்பட்டை புடித்த மயிர், குழி விழுந்த கண்கள், முகத்தில் கன்னங்கள் இருக்க வேண்டிய இடத்தில சதை என்று இருப்பதாக தெரியவில்லை, உடம்பும் அப்படியே!!!. முதல் அமைச்சர் " யாரப்பா நீ உன்னை பார்த்தால் வெளிநாட்டுக்காரன் போல் உள்ளது, எதற்காக எங்கள் நாட்டுக்கு வந்தாய், பிழைப்பு நடத்தவா அல்லது நீ ஒரு ஒற்றனா?? உண்மையை கூறி உன் உயிரை காப்பாற்றி கொள் " என்று கோவித்துகொண்டர். உடனே அந்த வறியவர் " தென் தமிழ் நாட்டின் முதல் அமைச்சரே !!! நான் வெளிநாட்டுகாரனும் அல்ல , ஒற்றனும் அல்ல !!! நான் ஒரு ஏழை !!! முன்னொரு காலத்தில் அகண்டு விரிந்து இருந்த தமிழ் நாட்டின் சாதாரண குடி மகன்!!! ஆனால் இன்று அந்த நாடு இல்லை ஆகவே உங்கள் தென் தமிழ் நாட்டில் வெளிநாடுகாரனாக உங்கள் முன் நிற்கிறேன். நான் ஒற்றனும் அல்ல ஏனென்றால் எனக்கு ஒரு நாட்டின் பிரஜய்க்கு உரிய வசதிகள் இல்லை. நான் பிழைப்பு தேடி தென் தமிழகம் வந்த ஒரு வறியவன். ஆனால் உங்கள் மன்னர் தேடும் சமய சஞ்சீவனி என்னிடம் உள்ளது அதை வைத்து கொண்டு தான் நானும் என் குடும்பம்மும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதை உங்கள் மன்னரிடமே வழங்கிவிட்டு பொன்னும் பொருளும் பெற்று செல்ல வந்தேன் " என்றார். மன்னர் கட்டளை இட்டு பல ஆண்டுகள் ஆகியும் ஒருவர் கூட வராத படியாலும் இவன் ஒருவனாவது வந்தானே என்று எண்ணி கொண்டு. "அப்படியா !!!! சரி வா உன்னை அரசன் இடம் அழைத்து செல்கிறேன் அவர் இடம் சென்று உன் மந்திரத்தை கொடுத்து விட்டு வரலாம் " என்று கூறி மன்னரிடம் அழைத்து சென்றார். மன்னர் தனது அரண்மனை தோட்டத்தில் ஒய்வு எடுத்து கொண்டிருந்தார். தோட்டத்தில் முதல் அமைச்சரை கண்ட உடன் ஏதோ அவசர செய்தி வருகிறது என்று எண்ணி "முதல் அமைச்சரே என்ன விடயம் !!! ஏதேனும் அவசர செய்தியா " என்று கேட்டார். முதல் அமைச்சர் " ஆம் ! மன்னா ஒரு வறியவன் வந்து இருக்கிறான் அவன் நீங்கள் கேட்ட மந்திரத்தை கொண்டு வந்திருக்கிறான்" என்றார். " என்ன வரியவனா வர சொல்லுங்கள் பார்ப்போம்" என்றார். அந்த வறியவன் மன்னன் முன் வந்து " மன்னர் மன்னா !!! வணக்கம்!!! என்னிடம் நீங்கள் விரும்பும் மந்திரம் உள்ளது. ஆனால் அதை நான் உங்களுக்கு வழங்க வேண்டும் என்றால் என் நிபந்தனைக்கு ஒத்து கொள்ளவேண்டும்" என்றான். "என்ன நிபந்தனையா !!! சரி சொல் " என்றார். வறியவன் " 1 நான் வழுங்கும் இந்த மந்திரத்தை நீங்கள் யாரிடமும் தர கூடாது. 2 நான் வழுங்கும் இந்த மந்திரத்தை நீங்கள் இப்பொழுது படிக்க கூடாது. எப்பொழுது உங்களக்கு ஆலோசனை வழங்க யாரும் இல்லையோ அப்பொழுதான் இதை படிக்க வேண்டும் " என்றான். மன்னரும் சரி என்று ஒப்புகொண்டார். உடனே அந்த வறியவன் ஒரு சீட்டில் ஒரு வாசகத்தை எழுதி மன்னரிடம் கொடுத்தான். அதை மன்னர் பெற்று கொண்டு தன் உடைய ரகசிய மோதிரத்தை திறந்து அந்த சீட்டை வைத்து மூடி விட்டார். மேலும் அந்த வறியவனுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து தன் நாட்டில் தொழில் செய்து கொள்ள வழி செய்தார். அந்த வறியவன் தன் இன்னல் கலைந்த மன்னரை வாழ்த்தி விட்டு சென்றான். பல ஆண்டுகள் இப்படியும் உருண்டோடின. விதி மதியை விட பெரியது என்பதால் வேற்று நாட்டு மன்னர்கள் படை எடுப்பில் தென் தமிழகம் விழுந்தது. மன்னனின் படைகள் சிதறி அடிக்கப்பட்டன, அமைச்சர்கள் சிறை பிடிக்க பட்டனர் அல்லது கொலப்பட்டனர். மன்னன் செய்வது அறியாது தன் அரண்மனையின் ரகசிய வழியில் தன் மனைவி மைந்தருடன் தப்பியோடி கொண்டிருந்தான், அப்பொழுது என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தான். உடனே முன்பு ஒரு நாள் வறியவன் வழங்கிய சமய சந்ஜீவனியின் நியாபகம் வந்தது. அவன் தன் ரகசிய மோதிரத்தில் இருந்த சீட்டை எடுத்து படித்தான். அந்த வாசகத்தை படித்த உடன் அவன் முகம் மலர்ந்தது புதியதோர் உணர்வு பெற்றான் தான் மேலும் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொண்டான். அந்த வறியவன் கொடுத்த அந்த சமய சஞ்சீவனி என்ன? அப்படி என்னதான் எழுதிவிட்டான் அந்த வறியவன். அந்த வறியவன் எழுதியது " இந்த நிலை மாறும் " என்ற ஒரு வரி தான். மன்னன் தான் இழந்ததை மீண்டும் பெற புதியதோர் படை திரட்டி மீண்டும் தென் தமிழகத்தை மீட்டு கொண்டான். அப்படி இழந்ததை பெற்றதும் அல்லாம்மல் பல நாடுகளையும் வென்று பேரரசு ஆனான். பல ஆண்டுகள் இப்படியும் உருண்டோடின. ஒரு நாள் நம் பேரசர் தான் வென்ற ராஜ்யத்தில் வந்த நாட்டிய காரர்கள் மற்றும் கலைஞர்கள் நடத்திய நிகழ்சிகளை கண்டு உள்ளம் நெகிழ்ந்து கூத்தாடி கொண்டு இருக்கையில் தன் கையில் இருந்த ரகசிய மோதிரம் கீழ விழுந்தது. உடனே துள்ளி குதித்து எழுந்து அந்த ரகசிய மோதிரத்தில் இருந்து வெளியில் விழுந்த சீட்டை கையில் எடுத்து கொண்டான். இப்பொழுது அந்த சீட்டை பிரித்து படித்தான், அதில் "இந்த நிலை மாறும்" என்பதை கண்ட உடன் அரசனின் உடல் நடுங்கியது. தன் நிலையை உணர்ந்து கொண்டான். அரசன் உணர்ந்தால் பல ஆண்டுகள் புகழ் பெற்ற அரசனாக விளங்கி பல வெற்றிகளையும் பெற்று வாழ்ந்தான். 

அரசனுக்க மற்றுமல்ல அனைவருக்குமே தேவை ஒரு ..... சமய சஞ்சீவனி.

Post a Comment

1 Comments

premkumar.raja@gmail.com