இலங்கையில் தமிழர் மறுகுடியமர்த்தம் : முதல்வர் அவசர கடிதம்


சென்னை : "இலங்கைத் தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணிகளை விரைவில் மேற் கொள்ளுமாறு இலங்கை அதிபரிடம் அறிவுறுத்த வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி அவசர கடிதம் எழுதியுள்ளார்.



பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள அவசர கடிதத்தில் கூறியிருப்பதாவது:கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன், இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த அனைத்து தமிழர்களும் மறுகுடியமர்த்தப்படுவர் என்று இலங்கை அரசு உறுதியளித்திருந்ததை நன்கு அறிவீர்கள். ஆனால், இன்னமும் 80 ஆயிரம் பேர் முகாம்களில் வசித்து வருகின்றனர் என்றும், அவர்கள் மறுசீரமைப்பு நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருக் கின்றனர் என்றும் எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் மறுகுடியமர்த்தப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினருக்கு பொருளாதார வசதிகள் செய்து தர வேண்டியுள்ளது.



நீதி சார்ந்த மறுவாழ்வு மூலம் நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும். எனவே, டில்லிக்கு வரும் இலங்கை அதிபரை சந்திக் கும் போது, சிறப்பு கோரிக் கையாக இந்த இரண்டு விஷயங்களை தாங்கள் வலியுறுத்த வேண்டும். இலங்கை முகாம்களில் வசிக்கும் தமிழர்களின் எதிர்பார்ப்புகளான, அவர்களை மறுகுடியமர்த்தும் மறுகட்டுமானப் பணிகளையும் விரைவில் மேற்கொள்ளச் செய்ய, அவரை தாங்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments