ஆங்கில மோகத்தால் குழந்தையை பறிகொடுத்த பரிதாபம்

திண்டுக்கல் : தெருக்கள் தோறும் புற்றீசல் போல அதிகரித்து வரும் பெரும்பாலான நர்சரி,பிரைமரி பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. ஆங்கில மோகம் காரணமாக, குழந்தைகளை இப்பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர் இழப்பையே சந்திக்கும் நிலை நீடிக்கிறது.



நாகரீகத்தோடு இணைந்த கல்வி வளர்ச்சியில், தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகள் அதிகளவு உருவாகின. குழந்தைப் பருவ மாணவர்களின் மன, திறன் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் அம்சங்களை கற்பிக்க இவை உருவாக்கப்படுகின்றன. மத்திய அரசின் திட்டப்படி, இவற்றில் விளையாட்டு, ஆடல், பாடல், பொழுதுபோக்கு அம்சங்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட வேண் டும். நர்சரி, பிரைமரி, கிண்டர் கார்டன் பள்ளிகளுக்கான அனுமதியைப் பொறுத்தவரை, அரசு உயர் அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லை. இதனால் சிறு நகரங்களில் கூட, தெருவிற்கு நான்கு பள்ளிகள் என்ற அளவிற்கு அதிகரித்து விட்டது. முறையான மின்வசதி, காற்றோட்டமான சூழல், வசதியான நுழைவுவாயில் உள்பட தேவையான வசதிகள் முழு அளவில் இருப்பது கேள்விக் குறி தான்.



கிராமங்களிலும் கீற்றுக் கொட்டகையில் இதுபோன்ற பள்ளிகள் இயக்கப்படுகின்றன. ஆங்கில மோகம் காரணமாக, இதுபோன்ற பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் விரும்புகின்றனர். பள்ளி நிர்வாகத்தினர், பல்வேறு கட்டணங்களுக்காக பணத்தை வசூலிப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்த தொகைக்கேற்ப வசதிகளை ஏற்படுத்தி தருவதில்லை.சில ஆண்டுகளுக்கு முன், கும்பகோணத்தில் மாடிவீட்டில் இயங்கி வந்த கிருஷ்ணா பள்ளியும் இதே ரகம்தான். இதனால் பச்சிளம் குழந் தைகளை பலி கொடுத்த பின்னரே, கெடுபிடியான உத்தரவுகளை அரசு வெளியிட்டது.தற்போது அவையும் முறையாக கண்காணிக்கப்படுவது இல்லை.



திண்டுக்கல்லில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு, நேற்று முன்தினம்(ஜூன் 17ல்) மூன்று வயது மாணவரை பலி வாங்கியது. முத்தனம்பட்டி அருகே சுரபி நர்சரி பள்ளியில், எல்.கே.ஜி., மாணவர் அபிலேஷ் "செப்டிக் டேங்க்'கில் இறந்து கிடந்துள்ளார்.



இப்பிரச்னை தொடர் பாக ஆய்வு செய்த தொடக்கக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுவாக உரிமம், கட்டட உறுதி, தீயணைப்பு வசதிகள் உள்ளிட்ட அம்சங் களின் அடிப்படையில் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும். இப்பள்ளியை ஆய்வு செய்த போது, எவரும் இல்லாமல் பூட்டிக் கிடந் தது. மூன்று சதுரடி அளவிலான "செப்டிக் டேங்', மூடப்படாமல் திறந்தே கிடந்தது. போதிய வசதிகள் இல்லாதது மட்டுமின்றி ஆபத்தை விளைவிக்கும் அம்சங்களும் தண்டனைக்குரியவை. மாணவர் இறந்தது தொடர்பாக தொடக்கக் கல்வித்துறை இயக்குநருக்கு அறிக்கை அனுப்பப்படும். இதன் அடிப்படையில், உயர் அதிகாரிகள் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.



கலெக்டர் வள்ளலார் கூறியதாவது: வெறுமனே சான்றுகளின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்குவது பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும் அதற்கான சான்று வழங்கிய அதிகாரிகள், கவனக்குறைவாக செயல்பட்ட பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக் கப்படும். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நர்சரி, பிரைமரி, கின்டர்கார்டன் பள்ளிகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை வழங்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள் ளது. என்றார்.

Post a Comment

0 Comments