ஜார்க்கண்ட் ராஜ்பவனில் தமிழ்

ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு பா.ஜ., ஆதரவை வாபஸ் பெற்ற பிறகு, தற்போது ஜனாதிபதி ஆட்சி அங்கு அமலில் உள்ளது. ஜார்க்கண்ட் கவர்னர் தான் தற்போது அங்கு ஆட்சி நடத்துகிறார். அவர் நம்ம ஊர்க்காரர். முன்னாள் புதுவை முதல்வர் எம்.ஓ.எச்.பரூக் தான் தற்போது ஜார்க்கண்ட் கவர்னர். சவுதி அரேபியாவில் இந்திய தூதராகப் பணியாற்றிய பிறகு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.சிபு சோரன் அரசு கவிழ்ந்த பிறகு கவர்னர் தான் அங்கு அனைத்து விவகாரங்களையும் கவனித்து வருகிறார். தமிழ் மரபுப்படி வேட்டியுடன் பவனி வரும் பரூக், நம்ம ஊர் சாப்பாடான இட்லி தோசைக்காக ஒரு தமிழரை வேலைக்கு வைத்துள்ளார். சவுதியில் தூதராகப் பணியாற்றிய போது ஏழு முறை மெக்காவிற்கு சென்று வந்துள்ளார்.எங்கும், எதிலும் ஊழலில் திளைக்கும் ஜார்க்கண்டில் அரசு ஊழியர்கள் மாத சம்பளம் வாங்கும் போது, கமிஷன் கொடுத்தால் தான் சம்பளமே கிடைக்கும். நிலைமை இப்படியிருக்கும் போது, மற்ற டெண்டர் விவகாரங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். தமிழகத்தோடு ஒப்பிட்டால் 25 வருடங்கள் பின் தங்கி உள்ளது ஜார்க்கண்ட்.அனைத்து அரசியல்வாதிகளும் ஊழலில் முழுகியுள்ளனர். ஏழைகளுக்கு ஒதுக்கப்படும் மத்திய அரசின் கோடிக்கணக்கான பணம் அவர்களுக்கு போய் சேருவதில்லை; அரசியல்வாதிகளின் பாக்கெட்டிற்குத் தான் போகிறது. இதை எப்படியாவது ஓரளவாவது தடுத்து நிறுத்த பரூக் திட்டமிட்டுள்ளார்

Post a Comment

0 Comments