தென்கொரிய அதிபர் மனைவி மூதாததையர் அயோத்தி நகரத்தினர்


சியோல்: தற்போதைய தென்கொரிய அதிபர் லீ யுங் மியுங் பக்கின் மனைவி, கிம் யூன் யோக்கின் முன்னோர்கள், அயோத்தியைச் சேர்ந்தவர்கள் என்ற சுவையான தகவல் வெளியாகியுள்ளது.


தென் கொரிய அதிபர் மாளிகை வட்டாரத் தகவல்களின் அடிப்படையில் "தி கொரியா டைம்ஸ்' வெளியிட்டுள்ள செய்தி:அதிபர் மனைவி கிம்மின் முன்னோர், அயோத்தி அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அந்த பரம்பரையில் பிறந்த ஹியோ வாங் யோக் என்ற பெண், கொரியாவுக்கு வந்து அப்போது இங்கு அரசாண்ட மன்னரை மணந்து கொண்டார்.கொரிய மொழியில் எழுதப்பட்ட 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த "சம்கக் யுசா' என்ற நூலில் இந்த செய்தி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஹியோ, தன் கனவில் அடிக்கடி ஒரு அழகான இளைஞரைக் கண்டார். அவரைக் கண்டுபிடிப்பதற்காக தன் பெற்றோர்களின் அனுமதியுடன் கப்பலேறி தென்கொரியா வந்து சேர்ந்தார். அப்படி வரும்போது, தன்னுடன் மீன்கள் படம் பொறித்த கல் ஒன்றையும் கொண்டு வந்தார்.தென்கொரியாவில், கயா பேரரசின் மன்னன் சுரோவைக் கண்டார். அவர்தான் தான் கனவில் கண்ட இளைஞர் என்று உணர்ந்த ஹியோ, சுரோவை மணந்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்த வாரிசுகள் மூலம்தான், கொரியாவில் கிம்ஹே கிம்ஸ் பேரரசு அமைந்தது.கடந்த 2004ல் கயா அரசர்களின் கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்ட மரபணுக்களும், இந்தியாவில் இப்பகுதியில் உள்ள குடிகளின் மரபணுக்களும் ஒத்திருந்தன. இதிலிருந்து கொரிய அரச பரம்பரைக்கும் இந்திய அரச பரம்பரைக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.ஹியோ கொண்டு வந்த மீன்கள்படம் பொறித்த கல்லையும் தொல்பொருளாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இவ்வாறு "தி கொரியா டைம்ஸ்' கூறியுள்ளது.

Post a Comment

0 Comments