ஆரம்பிச்சாச்சு.. "மெகா புள்ளி"யிடம் அசைன்மென்ட்.. வலையை வீசி "குறி" வெச்ச பாஜக.. விழிக்கும் அதிமுக

ஆரம்பிச்சாச்சு.. "மெகா புள்ளி"யிடம் அசைன்மென்ட்.. வலையை வீசி "குறி" வெச்ச பாஜக.. விழிக்கும் அதிமுக 

 சென்னை: அடுத்த ஆட்டத்தை ஆட தொடங்கிவிட்டதாம் பாஜக.. அந்த வகையில் ஒரு செய்தி அடிபட தொடங்கி உள்ளது.. இந்த முறை "வலை"யை அதிமுகவில்விசி உள்ளதாம் பாஜக மேலிடம்..! எல்லாரும் தேர்தலை முன்வைத்து அரசியல் செய்வார்கள் என்றால், பாஜக தேர்தலுக்கு பிறகுதான் அரசியலை கையில் எடுக்கும்.. வடமாநிலங்களில் அப்படித்தான் நடந்து வருகிறது.. அப்படித்தான் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.. அல்லது பங்கு போட்டுள்ளது. 

 இதற்கு சமீபத்திய உதாரணம் புதுச்சேரி.. பாஜக அங்கு இந்த அளவுக்கு வியூகம் வைத்து முன்னேறும் என்று யாருமே நினைக்கவில்லை.. ரங்கசாமி உடம்பு சரியாகி வந்தால்தான் பாஜகவின் அடுத்தக்கட்ட நகர்வு அங்கே என்னவென்று தெரியவரும். 


 ஆனால், புதுச்சேரியை போலவே, இங்கும் மெல்ல காய் நகர்த்த ஆரம்பித்துள்ளதாம் பாஜக.. இப்படி ஒரு முயற்சி, தேர்தலுக்கு சில மாதங்கள் இருந்தபோதே நடந்தது.. எந்தெந்த கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வரலாம் என்று பலரும் கணக்கு போட்டு கொண்டிருந்தால், பாஜக மட்டும், எந்தக் கட்சியிலிருந்து நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்று கணக்கு போட்டது. சென்னை ஹைகோர்ட் & மதுரை பெஞ்சில் ஆஜராக போகும்.. தமிழக அரசின் 17 புதிய வழக்கறிஞர்கள்.. அதிரடி தேர்வு சென்னை ஹைகோர்ட் & மதுரை பெஞ்சில் ஆஜராக போகும்.. தமிழக அரசின் 17 புதிய வழக்கறிஞர்கள்.. அதிரடி தேர்வு குக செல்வம் குக செல்வம் அதிலும், விபி துரைசாமி, குக செல்வம் போன்றோரை பாஜக தன் பக்கம் கொக்கி போட்டு இழுத்த நிலையில், இந்த கலக்கம் மேலும் அதிகமானது.. அதாவது, வலைவீசப்படும் நபர், மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் அந்தந்த பகுதிகளில் செல்வாக்குள்ள நபர்களாக இருந்தால் போதும் என்று மட்டுமே பாஜக அப்போது நினைத்தது. 

 இன்று நிலைமை அப்படி இல்லை.. தேர்தல் முடிந்துள்ள நிலையில், திமுக ஆட்சியில் கம்பீரமாக உட்கார்ந்துள்ளது.. பலமான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது.. எப்படியாவது அதிமுக மண்ணை கவ்வும் என்று நினைத்திருந்த நேரத்தில், அதிமுகவின் 66 எம்எல்ஏக்கள், பாஜகவே எதிர்பாராத ஒன்று.. அந்தவகையில், இந்த எம்எல்ஏக்களில் ஒருசிலரை மட்டும் தங்கள் பக்கம் இழுக்க பாஜக பிளான் செய்து வருகிறதாம்.. கொரோனா.. மக்களுக்கு ஓடி ஓடி உதவிய காங். ஸ்ரீநிவாஸ்.. பிடித்து விசாரித்த டெல்லி போலீஸ்.. என்ன நடந்தது? கொரோனா.. மக்களுக்கு ஓடி ஓடி உதவிய காங். ஸ்ரீநிவாஸ்.. பிடித்து விசாரித்த டெல்லி போலீஸ்.. என்ன நடந்தது? இதற்கான அசைன்மென்ட் நயினார் நாகேந்திரனிடம் தரப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.. 

நயினாரை பொறுத்தவரை அரசியலில் சீனியர்.. அதிமுகவில் எப்படி நன்மதிப்பை பெற்றிருந்தாரோ, அதுபோலவே பாஜக மேலிடத்திலும், அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றவர்.. அதனால்தான் இவர் பாஜகவில் சேர்ந்ததுமே பாஜக துணை தலைவர் பொறுப்பை தலைமை தந்தது. நிர்வாகிகள் நிர்வாகிகள் அதுமட்டுமல்ல, பாஜக தலைமை இவரை தேர்ந்தெடுக்க மற்றொரு காரணம், அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் பலரும் இப்போதுகூட நயினாருடன் நல்ல தொடர்பில் இருந்து வருகிறார்கள்.. 

நட்பு அடிப்படையில் நல்ல இணக்கமான போக்கும் உள்ளது.. அதனடிப்படையில் இப்படி ஒரு அசைன்மென்ட் தந்திருக்கலாம் என்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பழனிசாமி அதேபோல, அதிமுக உறுப்பினர்களில் ஒருசிலர் நேரடியாகவே பாஜகவில் நட்புறவில் இருப்பவர்கள்.. இதையும் தனக்கு சாதகமாக்க பாஜக முயல்வதாக தெரிகிறது.. பாஜக என்னதான் பிளான் போட்டாலும், இந்த நுணுக்கங்களை ஏற்கனவே அறிந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி.. எனவே, தன் பலத்தை பாஜகவிடம் எளிதில் விட்டுத் தந்துவிட மாட்டார்.. பாஜக ஒரு கணக்கு போட்டால், அதை ஆஃப் செய்வதுபோல எடப்பாடி பழனிசாமி வேறு ஒரு கணக்கு போடுவார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. 

  ஒருமுறை திருமாவளவன் சொல்லி இருந்தார், "புதுச்சேரியில் நடந்து வரும் அரசியல் ஒரு டிரையிலர்தான்.. விரைவில் நமக்கும் அப்படி ஒரு நிலைமையை பாஜக ஏற்படுத்தலாம்" என்று சொல்லி இருந்தார்.. அதற்கான அறிகுறிதான் இதுவா? புதுச்சேரி போலவே தமிழகமும் ஆகிவிடுமா? பாஜகவின் முயற்சி இங்கு கை கொடுக்குமா? இதிலிருந்து அதிமுக சுதாரித்து கொள்ளுமா? பார்ப்போம்..! 

Post a Comment

0 Comments