சிறீலங்கா மீதான தடைகள் - காத்திரமான ஐ.நா. பொறுப்புக்கூறல் பொறிமுறை – பிரித்தானியாவின் தொழிற்கட்சித் தலைவர் அழைப்பு!

தமிழர்களைக் கொன்று குவித்தவர்களைத் தண்டிப்பதற்கு ஏதுவான காத்திரமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஐ.நா. நிறுவ வேண்டும் என்று பிரித்தானியாவின் தொழிற்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

 

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 12ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று தொழிற்கட்சித் தலைவர் கீயெர் ஸ்ராமர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்தோடு தமிழர்கள் மீதான கொடூரங்களைப் புரிந்த சிறீலங்காவின் ஆட்சியாளர்கள் மற்றும் படைத்தரப்பினர் மீதான தடைகளைப் பிரித்தானிய அரசாங்கம் விதிக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் தொழிற்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது குறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் தொழிற் கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் தலைவர் சென் கந்தையா, தமிழர்கள் உயிர்வாழும் வரை தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு நீதிகோரும் போராட்டம் தொடரும் என்றும், இதனையே இன்று தொழிற்கட்சித் தலைவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை நிதர்சனமாக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே தமிழர்களுக்கு நீதி கிட்டுவதை வலியுறுத்தித் தொழிற்கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று காணொளி வடிவில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Virendra Sharma MP for Ealing, Southall marks Tamil Genocide Day






Ilford North MP Wes Streeting sends Mullivaikkal message to Tamils




Sam Tarry MP. Commemorates Mullivaikkal





Post a Comment

0 Comments