திருவண்ணாமலை தீபம் ஏற்பாடுகள் தீவிரம்


திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கார்த்திகை தீபப் திருவிழா, துர்க்கையம்மன் உற்சவத்துடன் இன்று துவங்கி, பத்தாம் நாள் திருவிழாவான டிச., 1ம் தேதி, மகாதீபம் ஏற்றப்படும். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், தீபத்திருவிழா கொடி ஏற்றத்துக்கு முன், இன்று துர்க்கையம்மன் உற்சவமும், நாளை பிடாரியம்மன் உற்சவமும், 21ம் தேதி வாஸ்து சாந்தியும் நடக்கின்றன.




வரும் 22ம் தேதி, தீபத் திருவிழாவின் கொடியேற்றம், காலை 4.15 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் நடக்கிறது. நான்காம் நாள் திருவிழா, வரும் 25ம் தேதி இரவு, கற்பக விருட்சம் வாகனத்திலும்; 26ம் தேதி, ரிஷப வானகத்திலும்; 27ம் தேதி, மகாரத தேரோட்டமும்; 28ம் தேதி, 63 அடி உயரமுள்ள மகாரத தேரோட்டமும், டிசம்பர் முதல் தேதி நடைபெறும் பத்தாம் நாள் திருவிழாவில், அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்படுகிறது.




தீபத் திருவிழாவை முன்னிட்டு, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புப் பணிக்கு, 9,000 போலீசார் ஈடுபடுத்தப்படுவர்.

Post a Comment

0 Comments