௨. சாம்பலில் இருந்து எழுந்த சோழ வம்சம். - அமுதன்


தமிழ் இனம் என்ற அடையாளம் தங்கி நிற்கும் அனைவருமே சோழ வம்சம்சத்தை வணங்கி வாழ்த்த வேண்டியவர்கள் என்றால் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை.

தமிழ் மக்கள் சாதரணமானவர்கள் அல்ல - சாதிக்க முடியாது என்று அனைவராலும் தட்டிக் கழிக்கபடுவதையும் அவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டக்கூடிய சாதனையளர்கள் என்ற ராஜ முத்திரைஐ நமக்கு கொடுத்து சென்று இருக்கிறது சோழ வம்சம்.
கலை, கல்வி, கலாச்சாரம், ஆட்சி நிர்வாகம், போர்த்திறமை, கடல் கடந்த வாணிபம், என்று அனைத்திலும், கொடிகட்டிப் பறந்த சோழ பேரரசர்களால் இந்த பெருமை நம்மோடு ஒட்டிக்கொண்டு இர்ருகிறது.

காவேரின் வேகத்தை, விவேகம்மாக தடுத்து நிறுத்திய கரிகாலன் ஆகட்டும் , 1000 ஆண்டுகள் ஆகியும் இப்போதுதான் கட்டிமுடிக்கப்பட்டது என்ற தோற்றத்துடன் ஆஜானு பாகுவாக எழுந்து நிற்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டி முடித்த ராஜராஜன் ஆகட்டும், வடக்கே கங்கை வரை - தெற்கே இல்லங்கை வரை படைஎடுத்துசென்று, கால் பதித்த இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டிய மாமன்னர்கள் ஆகட்டும்,சீன தேசம் மற்றும் இந்தோனேசியவரை சென்று , தமிழனின் புகழ்கொடியை நாட்டி, வாணிபத்தில் பொருள் ஈட்டி பெருமையோடு திரும்பிய மாமன்னர்கள் ஆகட்டும், அனைவருமே சோழ பரம்பரையில் வந்தவர்கள் தன என்ற தனி சிறப்பு தமிழனை பெருமிதம் கொள்ளச்செய்யும்.
அப்படிப்பட்ட சோழ வம்ச வரலாறு, நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்பது நம்மால் என்றுமே ஜீரணிக்க முடியாத சோகமாகத்தான் இருக்கும்.

சோழ பரம்பரை என்பது 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்ற போதிலும்,முதலாம் நுற்றாண்டில் வெளியான சங்க கால இலக்கியங்களில் தான் முதல் முறையாக சோழ மன்னர்கள் பற்றிய குறிப்பு தென்படுகிறது.

சோழ மன்னர்களின் புகழ் பாடும் பாடல்களாக இருக்கும் அவற்றில் மன்னர்களின் பெயர்கள் தான் இருக்கின்றனவே தவிர, அவர்களது வரலாற்று குறிப்பாக அது காணப்படவில்லை.
முதலாம் நுற்றாண்டில் கிரேக்க நாட்டை சேர்ந்த ஒருவர், நாடுகளைசுற்றி வந்து தனது பயண குறிப்பை ஏராளமாக எழுதி குவித்துவிட்டு , தனது பெயரை மட்டும் பதிந்து வைக்காமல் சென்று விட்டார். முதலாம் நுற்றாண்டில் உலக நாடுகள் எவ்வாறு இருந்தன என்று தெரிந்துகொள்ள காலக் கண்ணாடியாக விளங்கும் அந்த 'பெரிபிளுஸ் ஆப் தி எரித்ரியன் சீ' எனப்படும் தொகுப்பில் சோழ தேசத்து நகரங்கள் , துறைமுகம், வாணிபம், ஆகியவை பற்றிய சிறிய குறிப்புகள் உள்ளன.

அதன் பின் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப்பின் டோலமி என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் எழுதிய பயண குறிப்பிலும் சோழ தேசத்து துறைமுகம்கள் பற்றிய தகவல்கள் சில உள்ளன.

இலங்கை மன்னர்களின் வழக்கை குறிப்புக்கள் அடங்கிய 'மகா வம்சம்' என்ற சிங்கள புத்தகம், இலங்கை மீது சோழ மன்னர்களின் பல்வேறு படையெடுப்புகளை பட்டியலிட்டு காட்டுகிறது.

கிறிஸ்து பிறப்புக்கு 300 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை ஆண்ட அசோக மன்னர் பல இடங்களில் கல்வெட்டுகளுடன் கூடிய தூண்களை நிறுவி இருக்கிறார். அவற்றிலும் சோழ மன்னர்கள் பற்றிய வாசகம் இடம் பெற்று இருக்கிறது. சோழ மன்னர்களுடம் அசோகர் போர் புரியவில்லை என்றாலும், நாட்டின் தென்பகுதியில் சேர, சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சி நடந்ததாக அந்த குறிப்பு கூறுகிறது.

நமக்கு கிடைத்து இருக்கும் இதுபோன்ற வரலாற்று தகவலின்படி, இளம் சேட்சென்னி, கரிகால சோழன், நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி , கிள்ளிவளவன் , கோச்செங்கணான் , பெருநற்கிள்ளி போன்ற மன்னர்களின் பெயர்கள் , ஆரம்ப கால சோழமன்னர்களின் பட்டியலாக தெரிய வந்து இருக்கிறது.

ஆனால், இவர்களின் காலம் என்ன, ஒவ்வொருவரும் எந்த ஆண்டுகளில் ஆட்சி செய்தார்கள் போன்ற விவரங்கள் நமக்கு கிடைக்காமலே போய்விட்டன.
ஆங்காங்கு கிடைக்கும் கல்வெட்டுகள், செப்பேடுகள், பழங்கால நூல்களில் காணப்படும் விவரங்கள் ஆகியவற்றைக் கொண்டுதான் சோழ பேரரசின் விவரங்களை தேடிப்பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

சங்க காலத்திற்குப் பிறகு, சோழ பேரரசு என்ற ஒன்று இருந்தது என்பதே 600 ஆண்டுகளுக்கும் மேலாக மறைந்து கிடந்தபின் விஜயாலய சோழன் காலத்தில் தான் மீண்டும் சோழ வம்சம் தலையெடுக்க தொண்டகியது.

அதன் பின், வடக்கே பல்லவர்கள் ஆட்சியும் , தென்பகுதியில் பாண்டியர்களின் ஆட்சியும் சுமார் 3 நுற்றண்டுகளாக நீடித்தது .

அதன் பின், தமிழ் இனத்துக்கு சம்பந்தம் இல்லாத களப்பிரர்கள், தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, 300 ஆண்டுகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து இருந்தனர்.

அப்போது பாண்டிய மன்னராக இருந்த கொடுங்கோன், பல்லவ மன்னர் சிம்ம விஷ்ணு ஆகியோர் களப்பிரர்களை தமிழகத்தில் இருந்து விரட்டியடித்த பெருமையை தங்கள தாகிக் கொண்டனர்.

இடைப்பட்ட காலத்தில் புகழ் மங்கி இருந்த சோழர்கள், உறையூர் பகுதியில் மட்டும் குறுநில மன்னர்களாக இருந்து, சோழர் குளம் பூண்டோடு நசிதுவிடாமல் அந்த விர பரம்பரையின் வம்சாவளியை காப்பற்றி வந்தனர்.

அந்த கால கட்டத்தில், பலவர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையே போர் நடுக்கும் பொது சோழர்கள், நிலைமைக்கு தக்கபடி ஏதோ ஒரு மன்னருடன் இன்னைந்து செயல் பட்டதாகவும் இதே நிலையை தொடரமுடியாத அவர்கள் தற்போதைய ஆந்திர பகுதிக்கு சென்று அங்கு ஆட்சி புரிந்து வந்ததாகவும் தெரிகிறது. அங்கு சோழர்கள், 'சோட' என்று அழைக்கப்பட்டனர்.

6 - ம நுற்றாண்டில் தமிழகம்,வந்த சீன யாத்ரிகர் யூவான் சுவாங், காஞ்சிபுரத்தில் பல மாதங்கள் தங்கி இருந்தார். அப்போது அவர் எழுதிய குறிப்புகளில் 'குழி-யா' என்ற மன்னராட்சி பற்றி எழுதி இருக்கிறார். இது தெலுங்கு சோழ மன்னர்கள் பற்றிய தகவல்களாக அனுமானிக்கப்படுகிறது.

848 - ஆம் ஆண்டில் தஞ்சைக்கு வடமேற்கே, தற்போது ' செந்தலை' என்று அழைக்கப்படும் ' சந்திரலேகை' சதுர்வேதி மங்களம்' என்ற ஊரை தலைநகராகக் கொண்டு முத்தரையர்கள் ஆட்சி புரிந்து வந்தனர்.

அப்போது திருப்ரம்பயம் என்ற இடத்தில் நடைபெற்ற போர், சோழர்களின் மறு வாழ்வுக்கு வித்திட்டது. அங்கு விஜயாலய சோழனின் மகன், முதலாம் ஆதித்தன் தலைமையில் சோழர் படை, அபராஜிதவர்மன் என்ற பல்லவ மன்னன் உதவியுடன் படையெடுத்துச் சென்று முத்தரையர்களை வென்று தஞ்சையை கைப்பற்றியது.

மன்னர் அபராஜிட்டன் , தொண்டைமண்டலம் மற்றும் திருமுனைப்பாடியை தனக்கு எடுத்துக்கொண்டு மற்ற சோழர் பகுதிகளை விஜயாலய மன்னனிடம் கொடுத்துவிட்டுச் சென்றான்.

இதன் காரணமாக, சாம்பலில் இருந்து எழும் 'பினிக்ஸ்' பறவையை போல, தமிழகத்தில் அழிந்து விடும் நிலையில் இருந்த சோழர் பரம்பரை மீண்டும் துளிர்விட தொடங்கியது. அந்த தொடக்கம் அபாரமாக அமைந்து விட்டதால், விஜயாலய சோழனின் வழி வந்த சோழ மன்னர்கள் எல்லாம் சாதனை வீரர்களாக திகழ்ந்து சரித்திம் படைத்தார்கள்.

Post a Comment

0 Comments