தமிழ் மாணவர்கள் படிக்க இலங்கையில் எந்த வசதியும் இல்லை

திண்டுக்கல் : ""இலங்கையில் தமிழ் மாணவர்கள் படிக்க எந்த வசதிகளும் இல்லை'',என விடுதலைச்சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: தமிழக எம்.பி.,க்கள் குழு இலங்கை சென்று வந்த பிறகு, அங்கு முகாம்களில் இருந்து ஒரு லட்சம் தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு இரண்டாயிரம் ஆசிரியர்கள் உள்ளதாக கூறுகின்றனர். உண்மையில் அங்கு பள்ளிகளே இல்லை. தமிழ் மாணவர்கள் படிக்க எந்த வசதியும் இல்லை. இலங்கை அதிபர் ராஜபக்ஷேவையும், அவரது சகோதரர்களையும் போர்க்குற்றவாளிகளாக உலக நாடுகள் அறிவித்து, இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும்.




வாகன ஊர்வலம்: பெரியாறு அணை விஷயத்தில் தமிழகத்திற்கு எதிராக நடந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை கண்டித்து நவ., 1ல் தி.மு.க., நடத்தும் கண்டன கூட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறோம்.புதிய அணை கட்டுவதை எதிர்த்து நவ. 2,3ம் தேதிகளில் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் மேலூரில் இருந்து மதுரை, தேனி வழியாக கூடலூர் வரை கண்டன வாகன ஊர்வலம் நடக்கும். கோவையில் நடைபெற உள்ள செம்மொழி மாநாட்டில் எங்கள் அமைப்பு பங்கேற்கும், என்றார்.

Post a Comment

0 Comments