இலங்கை அகதிகள் நலனுக்காக தேவையான நிதி: முதல்வர் உறுதி

சென்னை : "தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நிலை குறித்து, அனைத்து துறையினர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில், அகதிகள் இன்புற்று வாழ தேவையான நிதி ஒதுக்கப்படும்' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.




அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:முள்வேலி முகாம்களுக்குள் இலங்கையில் தமிழ் அகதிகள் அவதிப்படுவதை எண்ணி கண்ணீர் உகுத்து, அந்த முகாம்களில் இருந்து அவர்களை விடுவிக்க தமிழக எம்.பி.,க்கள் குழு சென் றது. இதன் மூலம் அவர்கள் நிலை அறியச் செய்யப்பட் டது.இதன் விளைவாக, மகத் தான வெற்றி கிடைக்கா விட்டாலும், அடைபட்டிருந்த இரண்டு லட்சம் பேரில், ஒரு லட்சம் பேரையாவது இதுவரை அந்தக் கூண்டுகளிலிருந்து வெளியே கொணர்ந்து, அவர்கள் சொந்த இருப்பிடங்களுக்குச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள் ளது.அது போதுமானதல்ல; அவர்கள் அனைவரையும் விடுவித்து, வாழ்வாதரங்களை வகுத்தளித்து, மீண்டும் அமைதியான நல்வாழ்வு பெற்றிட மத்திய அரசின் முயற்சிகளும், அதற்காக நமது தூண்டுதல்களும் தொடங் கப்பட வேண்டும்.




இங்கு அகதிகளாக குடியேறியுள்ள இலங்கைத் தமிழர்களை, இந்த மண்ணின் நிரந்தர குடிமக்களாக ஆக்கிட வேண்டுமென்று, அதற்கான முயற் சியில் ஈடுபட்டு வருகிறோம். நமது வேண்டுகோளை பரிசீலிப்பதாக மத்திய அரசின் சார்பிலும் வாக்களிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக இருக் கும், இலங்கை அகதிகள் நிலை என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகிற, நம் நெஞ்சைக் குத்திக் காட்டுகிற நிலையில் வெளியான ஒரு செய்தியை நான் படித் தேன்.அகதிகளாக இங்கு வந்துள்ள இலங்கைத் தமிழர்கள் தாங்கள் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரங்கள், வசதிகள் ஏதுமின்றி எத்தனை துன்பங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் புகைப்படங்களைப் பார்க் கும் போது, கண்ணீர் பெருகியது.




அவர்களின் கவலைகளை உடனே தீர்க்க, அவசர நடவடிக்கை மேற் கொள்வது நம் கடமை. இலங்கைத் தமிழ் அகதிகளைப் பாதுகாத்து, பட்டினி போக்கி, படிப்பு வாய்ப்பு வழங்கி, அமைதியாக வாழச் செய்திட தமிழக அரசின் எல்லாத் துறைக்கும் பொறுப்பு உண்டு.அவர்களுக்கு வாழ்வளிக்க அனைத்து துறையினரோடும் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளேன். இலங்கை தமிழ் அகதிகள் இன்புற்று வாழ, இந்த கூட்டத்தில், தேவையான நிதி ஒதுக்கி, அவர்களின் தேவைகள் நிறைவு செய்ய வழி வகுக்கப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments