கோவை மாநாட்டுக்கு மேலும் 4 குழுக்கள்


சென்னை:உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக, இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 17 குழுக்கள் தவிர, மேலும் நான்கு குழுக்களும், அவற்றின் நிர்வாகிகளும் அறிவிக்கப் பட்டுள்ளனர்.தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி, இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 17 குழுக்களைத் தவிர, மேலும் நான்கு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு:மாநாட்டு ஏற்பாடுகள் மேற்பார்வைக் குழுத் தலைவராக, துணை முதல்வர் ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

துணைத் தலைவர்களாக அமைச்சர்கள் கோ.சி.மணி, சுப.தங்கவேலன், உபயதுல்லா, மைதீன்கான், கீதா ஜீவன், சாமி, மதிவாணன் மற்றும் பிற குழுக்களின் தலைவர்களாக உள்ள அமைச்சர்களும் இதில் இடம்பெறுவர்.போக்குவரத்து ஏற்பாட்டுக் குழுத் தலைவராக, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

துணைத் தலைவர்களாக இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, முன்னாள் எம்.பி.,க்கள் சுப்பராயன், சுப்பையன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் மீட்புப் பணிகள் குழுத் தலைவராக தலைமைச் செயலர் ஸ்ரீபதி செயல்படுவார். துணைத் தலைவர்களாக உள்துறைச் செயலர் மாலதி, சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி., ஜெயின், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டி.ஜி.பி., நடராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆய்வரங்க அமைப்பு உதவிக் குழுத் தலைவராக பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் செயல்படுவார்.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments