தனியார் துறையிலும் ஊழல் சொல்கிறது ஆய்வு

புதுடில்லி : "இந்தியாவில், தனியார் துறையிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது; குறிப்பாக, அத் துறையில் உயர்மட்ட அளவில் ஊழல் அதிகரித்துள்ளது' என்று, ஓர் ஆய்வு கூறியுள்ளது. "சந்தைப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சிக் கழகம்' (எம்.டி.ஆர்.ஏ.,) என்ற அமைப்பால், டில்லி, நொய்டா, குர்கான், மும்பை, புனே, பெங்களூரு, கோல்கட்டா, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில், தனியார் துறையில் வேலை பார்க்கும் 742 ஊழியர்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது: தனியார் துறையில் ஊழல் புரையோடிப் போய்விட்டதாக, 86 சதவீதம் பேர் கருத்துக் கூறியுள்ளனர். குறிப்பாக, அத்துறையில், கீழ்மட்டத் தில் ஊழல் இருப்பதாக 83.4 சதவீதம் பேரும், மத்திய நிர்வாகத்தில் இருப்பதாக 88.1 சதவீதம் பேரும், உயர்மட்டத்தில் ஊழல் இருப்பதாக, 90.2 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். நிர்வாகத்தில் பணப் பரிமாற்ற ஊழல் இருப்பதாக 39.2 சதவீதம் பேரும், வேண்டப்பட்டவர்களுக்கு உறவினர்களுக்கு சலுகைகள் அளிப்பது குறித்து 17.1 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்

Post a Comment

0 Comments