விடுதலைப்புலிகளை அழித்தது இலங்கை வளர்ச்சிக்கு உதவும்

கொச்சி : "தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தான் விடுதலைப் புலிகளின் செயல் பாடுகள் குறைந்தன. அவர்களை அழித்தது இலங்கையின் வளர்ச் சிக்கு பெரிதும் உதவும்' என, இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா தெரிவித்தார். கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கே, கொச்சியில் நடந்த ரோட்டரி சங்க மாநாட்டில் பேசியதாவது: இலங்கையில் என்னுடைய ஆட்சிக் காலத் தில் தான், விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் குறைந்திருந்தன. என்னை கொலை செய்ய முயன்ற விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் துணிந்தேன். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து என்னை முட்டாள் என்றனர். அவர்களுடன் போரிடுவது மட்டுமே பலனை தரும் என்றனர் வேறு சிலர். பேச்சுவார்த்தை மற்றும் போர் நிறுத்தம் மூலம் அவர்களது செயல் பாடுகளை குறைக்க முடிந்தது. இந்த நடவடிக்கை இலங்கையின் வளர்ச்சிக்கு உதவி செய்தது. விடுதலைப் புலிகள் வசமிருந்த முக்கால் வாசி இடங்களை எனது ஆட்சிக் காலத் தில் கைப்பற்றினேன். ஊழல் களை அறவே அகற்ற பெரும் பாடுபட்டேன். ஊழலை குறைக்க முடிந்ததே தவிர ஒழிக்க முடியாமல் போனது என்றார்.


செப்டம்பர் 21,2009,00:00 IST

Post a Comment

0 Comments