வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றி 'ஹாப்பி தீபாவளி' கொண்டாடினார் ஒபாமா


வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகையில் குத்து விளக்கு ஏற்றி, "ஹாப்பி தீபாவளி...' சொல்லி, தீபாவளிப் பண்டிகை கொண்டாடினார். அமெரிக்க அதிபர் மாளிகையில், தீபாவளி கொண் டாடும் வகையில், நேற்று முன்தினம், அதிபர் ஒபாமா குத்துவிளக்கேற்றினார். பின்னர், "அசதோமா சத்கமய...' என்ற, உலக அமைதிக்கான உபநிஷத் மந்திரத்தை, அமெரிக்காவின் சிவா விஷ்ணு கோவில் குருக்கள் வாசித்தார். அதை உன்னிப்பாகக் கேட்ட அதிபர் ஒபாமா, பிறகு அவருக்கு நன்றி தெரிவித்து, வெள்ளை மாளிகையில் கூடியிருந்த அனைவருக்கும், "ஹாப்பி தீபாவளி... சால் முபாரக்...' என வாழ்த்து தெரிவித்தார். பின்னர், "அமெரிக்காவிலும், உலகம் முழுவதிலும் உள்ள இந்து, சீக்கிய, ஜைன, புத்த மதத்தைச் சார்ந்தவர்கள், வரும் சனிக் கிழமை தீபாவளி கொண்டாடுகின்றனர்.




வாழ்வில் இருளை அகற்றி ஒளி ஏற்றும், அறியாமையை அகற்றி அறிவை வளர்க்கும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த் துக்கள்' என்றார். வெள்ளை மாளிகையில், இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர், இந்திய பிரஜைகள், பத்திரிகையாளர்கள் என, 150 பேர் கூடியிருந்தனர். அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்ததும், பத்திரிகையாளர் ஒருவர், "தீபாவளி கொண்டாட்டத்திற்கு வருகை தந்திருக்கும் முதல் அதிபரான தங்களுக்கு நன்றி' எனக் கூறினார். இதைக் கேட்ட அதிபர் ஒபாமா, "ஆமாம்... இது எப்படி இருக்கு...' எனக் கேட்டு, சிரித்தார். அனைவருக்கும், இனிப்பு வழங்கப் பட்டது.




கடந்த 2003ல், வெள்ளை மாளிகை தீபாவளிக் கொண் டாட்டத்தைத் துவக்கி வைத்தவர், அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் தான் என்றாலும், விழாவில் அவர் நேரடியாகக் கலந்து கொண்டதில்லை. எனவே, முதன் முதலில் தீபாவளிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெற்றுள்ளார். பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபண்டும், தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியுள்ளதாவது: பிரிட்டனிலும், தெற்கு ஆசியா போன்ற உலக நாடுகளிலும் தீபாவளி கொண் டாடும் அனைவருக்கும், மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவிக்கிறேன். பல மதத்தினரும் கொண்டாடும் இந்த தீபாவளி, பிரிட்டன் மக்களின் வாழ்க்கையில் எப்படி ஒளியூட்டுகிறது என்பதை நினைவு கூறும் நேரம் இது. உலக அளவிலான சவால் களை, ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டிய இந்த நேரத்தில், தீபாவளிக் கொண்டாட்டம், அனைவரையும் ஒன்று சேர்க்கிறது. இவ்வாறு மிலிபண்ட் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments