இலங்கைக்கு சீனா ரூ.2,050 கோடி நிதியுதவி


கொழும்பு:கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளின் வளர்ச்சிக்காக இலங்கைக்கு 2,050 கோடி ரூபாயை சீனா அளித்துள்ளது.இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:சீனா மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையே நிதியுதவி அளிப்பது தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, இலங்கையின் மாத்தளையில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பது உள்ளிட்ட முக்கியமான கட்டமைப்பு பணிகளுக்காக இலங்கைக்கு, சீனா சார்பில் 2,050 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்.


சாலை, ரயில் பாதை மற்றும் கட்டட வேலைகள் தொடர்பான பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே சீனாவிடம் இருந்து நிதியுதவி பெறப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.இதற்கிடையே, இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள மாஜி விடுதலைப் புலிகளின் மறுவாழ்வுக்கான பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.


இவர்களில், வவுனியா முகாமில் தங்கியிருந்த சதீஸ்வரி, விஜிதா என்ற முன்னாள் பெண் விடுதலைப் புலிகள் விடுவிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு முகாமிலேயே தையற் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், இது அவர்களின் எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments