ஆஸி.,யில் படிக்க விண்ணப்பிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை சரிவு

மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவில் தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்க விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து விட்டன.ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த ஓராண்டாக இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் ஒரு சிலர் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாகக் குறைந்து விட்டதாக, தனியார் கல்லூரிகளின் கவுன்சில் அதிகாரி ஆன்ட்ரூ ஸ்மித் தெரிவித்துள்ளார்.


சீனா மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பதும் கணிசமாகக் குறைந்து விட்டன. இதற்கு பதில், மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பம் சற்று கூடியுள்ளன."இந்தியா உள்ளிட்ட தெற்காசிய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படிக்க தயங்குவதால், ஆஸ்திரேலியாவின் மதிப்பு குறைந்துள்ளது. இதை நிவர்த்தி செய்ய ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்' என, ராட் ஜோன்ஸ் என்ற கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments