ஆட்சி மொழியாக தமிழை செயல்படுத்துவதில் சிக்கல்


தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப் பட்டாலும், அதை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தூய தமிழை முழுமையாக பயன்படுத்தும் அரசுத் துறைகள், அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர் களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் பயிலரங்கம், கருத்தரங்கம் நடத்துவதுடன் தமிழ் வளர்ச்சித் துறை முடங்கிப் போய் விடுகிறது.

அதிகாரம் இல்லாத துறை: தமிழ் பயன்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை. இதனால் அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்துங் கள் என கெஞ்சும் நிலையில் தமிழ் வளர்ச்சித்துறை உள்ளது.பல துறைகளின் உயர் அதிகாரிகள், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு தமிழ் தெரியாது என்பதற்காக ஆங்கிலத்தில் தான் அரசாணைகள் வெளியிடப்படுகின்றன. இதை கட்டுப்படுத்த முடியாத நிலையிலும் தமிழ் வளர்ச்சித்துறை உள்ளது.



தமிழ் ஆட்சி மொழி ஆணையம்: மத்திய அரசில், இந்திக்கு ஆட்சி மொழி ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. இதற்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு தனித்து இயங்கி வருகிறது. இது போல் தமிழ், ஆட்சி மொழியாக செயல்படுத்துவதற்கு தமிழ் ஆட்சி மொழி ஆணையம் அமைக்கப்பட்டு அதற் கென தனித்து இயங்கும் அதிகாரங்கள் வழங்கினால் தான், தமிழ் பயன்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அப்போது தான் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கும். இல்லை என்றால் ஆங்கிலம் கலந்த இணைப்பு மொழியாகவே இருக்கும். எனவே, உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தவுள்ள அரசு, தமிழ் ஆட்சி மொழி ஆணையத்தை உருவாக்க வேண்டும்.

Post a Comment

0 Comments