ஓட்டெடுப்பில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா வெற்றி


புதுடில்லி : மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் எலெக்ட்ரானிக் மற்றும் ஓட்டுச்சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மசோதாவிற்கு ஆதரவாக 186 பேரும், எதிர்த்து ஒருவரும் ஓட்டளித்தனர் ஓட்டளித்தனர். எதிராக யாரும் ஓட்டளிக்கவில்லை. இந்த ஓட்டெடுப்பில் பகுஜன் சமாஜ் கட்சி கலந்து கொள்ளவில்லை. இந்த மசோதா அரசியல் சட்டப்படி சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களாலும், சபையில் இருந்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டுபங்கிற்கு அதிகமாகவும் ஆதரவு பெற்றதால் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


அதனை தொடர்ந்து மசோதால பிரிவு வாரியாக ஓட்டெடுப்பிற்கு விடப்பட்டது. பின்னர் அவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.


சட்ட அமைச்சர் பதில் : மசோதாவிற்கு பதில் அளித்த பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, அவையில் கடந்த 2 நாட்களில் நடந்த சம்பவங்களை அவைத்தலைவர் திறமையாக கையாண்டதாகவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகளின் கோரிக்கை இந்த மசோதா பார்லிமென்டில் சட்டமாக இயற்றப்பட்ட பின் பரீசிலனை செய்யப்படும் என்றும், இதற்காக தனி மசோதா நிறைவேற்றலாம் என்றும் கூறினார்.



மன்மோகன் சிங் உரை : மசோதா குறித்து உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், அவையில் கடந்த 2 நாட்களாக நடந்த சம்பவங்கள் வருத்தத்திற்க்கூறியவை என்றும், இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்றார். மேலும் நமது நாட்டில் பெண்கள் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு பிரச்சனைகள் சந்தித்துள்ளனர். இந்த மசோதா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.


இன்று பலத்‌த கோஷத்திலும் ‌கேள்வி ‌நேரம் : இன்று ( 9ம் தேதி ) சபை 11 மணிக்கு கூடியதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., க்க்கள் கோஷம் எழுப்பினர்.. ஆனாலும் சபாநாயகர் மீராகுமார் பொருட்படுத்தாமல் கேள்வி நேரத்தை நடத்தினார். தொடர்ந்து 11. 30 மணி அளவில் 10 நிமிடம் சபையை ஒத்தி வைத்து ‌தொடர்ந்து 11. 30 க்கு சபை துவங்கியது. இப்போதும் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் லோக்சபாவை 12 மணி வரை ஒத்தி வைத்தார். தொடர்‌ந்து 2 மணிக்கு சபை கூடியது. தொடர்‌ந்து 4 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து லோக்சபா நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. இது போல் ராஜ்ய சபாவும் ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக சபையில் சிலி நில நடுக்கத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டது.


பிரதமர் - ஜனாதிபதியுடன் லாலு சந்திப்பு : இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக ராஷட்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மன்மோகன்சிங், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில் இந்த இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரைத்‌தோம் என்றார் லாலு. முலாயம்சிங் யாதவ் , சரத் யாதவ்வும் பிரதமரை சந்தித்து பேசினர்.


முலாயம் சிங் சொல்கிறார் : இது குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் கூறுகையில் ; நாங்கள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிரானவர்கள் அல்ல. தற்போது உள்ள நிலையில் இருந்தால் ஏற்க முடியாது. இந்த மசோதாவில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நோக்கம். அனைத்து பிரிவினருக்கும் சலுகைகள் வழங்கப்பட்டால் தான் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

சஸ்பெண்ட் உத்தரவு : நேற்றைய சபையில் அமளியில் ஈடுபட்டு மசோதாவை கிழித்து எறிந்த எம்.பி.,க்க்ள் 7 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் ராஜ்யசபை அவைத்தலைவர் அமீது அன்சாரி. சபையில் நாகரிமாகவும், இடையூறு செய்யும் விதமாகவும் ஈடுபட்ட நந்தகிஷோர் யாதவ், சுபாஷ் யாதவ், வீர் பால் சிங் யாதவ், இஜாஸ் அலி, கமல் அக்தார், அமீர் ஆலம்கான் , சபீர் அலி உள்ளிட்ட 7‌ பேரை சஸ்பெண்ட் செய்வதாக சபையில் அறிவித்தார் அவைத்தலைவர் அனசாரி . இதற்கும் கடும் எதிர்ப்பு கோஷம் எழுந்தது. எம்.பி.,க்கள் அனைவரும் ராஷ்டிரிய ஜனதா தள் மற்றும் சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். சபை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 2 மணிக்கு கூடி பி்ன்னர் 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.


4 மணிக்கு கூடியதும் பா.ஜ., விவாதம்: 4 மணிக்கு சபை துவங்கியதும் விவாதம் நடத்த வேண்டும் என்ற பா.ஜ., கோரிக்கையை அவைத்தலைவர் ஏற்றார். தொடர்ந்து பா.ஜ., தரப்பில் அருண்ஜெட்லி பேச முற்பட்டார். ஆனால் சமாஜ்வாடி , ராஷ்ட்டிரிய ஜனதா தள எம்.பி.,க்கள் அவைத்தலைவர் அருகே சென்று கோஷமிட்டனர். எவ்வாறு கோஷம் எழுப்பினாலும் விவாதம் இல்லாமல் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அன்சாரி அறிவித்தார். முதலில் குரல் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு அதில் மெஜாரிட்டி கிடைத்தது . தொடர்ந்து எலக்ட்ரானிக் ஓட்டுக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டதும் சபையில் இடையூறு செய்த எம்.பி.,க்கள் காவலர்கள் மூலம் அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது. ரகளையில் ஈடுபட்ட ( சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் உள்பட ) எம்.பி.,க்களை பாதுகாவலர்கள் சபையில் இருந்து அப்புறப்படுத்தினர்.


விவாதம் இல்லாமல் ஓட்டெடுப்பு நடத்துவதற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து சபையில் பா.ஜ., மாநிலங்களவை தலைவர் அருண்ஜெட்லி பேசினார். இவர் பேசுகையில் மகளிர் மசோதாவுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. நிறைவேற்றுவதில் ஆதரவு தருவதில் பெருமை கொள்கிறோம். அதே நேரத்தில் அரசு விவாதம் என்ற உரிமையை பறிப்பது கண்டிக்கத்தக்கது. விவாதத்தின் மூலம் இந்த மசோதா எத்தகையது என்பது மக்களுக்கு தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் ஜெயந்தி நடராஜன், மார்க்சிஸ்ட் சார்பில் பிருந்தா காரத் , தி.மு.க., சார்பில் கனிமொழி அ.தி.மு.க., சார்பில் மைத்ரேயன் ஆகியோர் பேசினர்.

அ.திமு.க., ஆதரவு : மகளிர் மசோதாவுக்கு அ.தி.மு.க., முழு ஆ‌தரவு அளிப்பதாக மைத்ரேயன் பேசினார். தமிழகத்தில் கட்சி தலைவர் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்தார். மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது ஜெயலிதா காலத்தில்தான் என்றார். ம‌களிர் முன்னேற்றம் நாட்டிற்கு அவசிய தேவை என்றார்.

Post a Comment

0 Comments