இலங்கை அகதிகளுக்கு விசா தடையை நீக்கியது ஆஸ்திரேலியா




சிட்னி, ஜூலை 6- இலங்கையில் இருந்து அடைக்கலம் கோரி வருபவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை ஆஸ்திரேலியா இன்று நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டின் புதிய பிரதமர் ஜூலியா கில்லர்ட் இன்று சிட்னியில் செய்தியாளர்களிடம் வெளியிட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், இலங்கை அகதிகள் தொடர்பாக ஆஸ்திரேலியா புதிய மண்டலக் கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் நியூசிலாந்து, கிழக்கு தைமோர் ஆகிய நாடுகளில் ஆஸ்திரேலியா சார்பில் அகதிகளுக்கான மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா நோக்கி வருகின்ற இலங்கை அகதிகள் நேரடியாக அந்த மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அங்கு அவர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்தபின்னர், ஐநா சபை மூலம் அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments