தோனிக்கு நடிகை லட்சுமி ராய் வாழ்த்து



கிரிக்கெட் வீரர் தோனியின் திருமண வாழ்க்கைக்கு அவரது முன்னாள் பெண் தோழியான நடிகை லட்சுமி ராய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"சாக்ஷி மீதான தோனியின் காதல் குறித்து எனக்கு முன்பே தெரியும். எனினும், அதுகுறித்து தகவல் வெளியாவதை தோனி விரும்பவில்லை. தற்போது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள அவர்களின் மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்கள். நானும் தோனியும் நண்பர்களாகத் தான் பழகினோம் என்பதை ஏற்கெனவே பலமுறை நான் கூறியபோது யாரும் நம்பவில்லை. தற்போது தோனி திருமணம் மூலம் அந்த உண்மை வெளியாகியுள்ளது. இது எனக்கு ஆறுதலாக உள்ளது." என்று லட்சுமி ராய் கூறியுள்ளார்.

தோனி-காக்ஷி திருமணம் சனிக்கிழமை இரவு டேராடூனில் நடைபெற்றது. அவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments