தஞ்சை பெரிய கோவில் 1,000 ஆண்டு நிறைவு:மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு

சென்னை:தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தஞ்சை நகர மேம்பாட்டுப் பணிகளுக்கு 25 கோடியே 19 லட்சம் ரூபாயை ஒதுக்கி, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.மாமன்னர் ராஜராஜனின் தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவடைவதை கொண்டாடும் வகையில், தமிழக அரசின் சார்பில், தஞ்சையில் செப்., 25 மற்றும் 26ம் தேதிகளில் விழா நடத்தப்படுமென முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.

இதையொட்டி, தஞ்சை நகரில் சாலைகள் மேம்பாடு, பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டுகள் மேம்பாடு, பெரிய கோவில் முதல் மருத்துவக் கல்லூரி வரை தெருவிளக்குகள், ராஜராஜ சோழன் சிலை நிறுவப்பட்டுள்ள பூங்காவை அழகுபடுத்துதல், பெரிய கோவில் அருகிலுள்ள ஜி.ஏ.கால்வாயின் பாலத்தை அகலப்படுத்துதல் ஆகிய அடிப்படை பணிகளை நிறைவேற்ற 25 கோடியே 19 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் கருணாநிதி நேற்று உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments