சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் போதே தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் தேர்தல் ஜுரம் தொற்றிக்கொண்டு விட்டதாகவே தோன்றுகிறது.திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தேர்தல் விரைவில் வர இருக்கிறது என்று கூறி தமது கட்சி பெருமக்களை தேர்தல் வேலைகளை தொடங்கு மாறு பணித்து இருக்கிறார். அதே போல அதிமுக வினரும் தேர்தல் பிரசாரங்களை ஏற குறைய தொடங்கி விட்டனர்.

விஜயகாந்த் தன் பிறந்தநாள் செய்தியாக தேமுதிக வினருக்கு " திமுக மற்றும் அதிமுக இல்லாத கூட்டணியில் தான் இருப்போம்" என்று அறிவித்துவிட்டார். ஆகையால் தமிழ்நாட்டில் ஏறக்குறைய மூன்று அணிகள் மோதும் என்று தெரிகிறது. ஆனால் சென்ற முறை திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் இந்த முறை இடம்பெரும்மா என்பது கேள்வி குறியே.

காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி அமைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகளும் , பாமக தலைமையில் ஒரு கூட்டணி அமைப்போம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் அறிவித்து இருபது தமிழ்நாட்டில் பல முனை போட்டி உருவாகும் நிலம்மை உள்ளது.

அரசியலில் நிரந்தர எதிரி யாரும் இல்லை நம்பனும் இல்லை என்ற மந்திரத்தை கையில் எடுத்தாள் தமிழ்நாடு அரசியலில் என்ன நடக்கும் என்று கூறுவது கடினம். ஆகையால் தமிழ்நாடு மக்களை போல் பொறுமை காப்போம்.

Post a Comment

0 Comments