ஈழத்தமிழர்களிடத்தில் தான் உலக தமிழர்கள் தமிழ் தேசியத்தின் அருமையை கற்றுக்கொள்ளவேண்டும் .

 ஈழத்தமிழர்களிடத்தில் தான் உலக தமிழர்கள் தமிழ் தேசியத்தின் அருமையை கற்றுக்கொள்ளவேண்டும் .தலைவர்கள் வருவார்கள் போவார்கள் கட்சிகள் வரும் போகும் ஆனால் மக்கள் தங்களுக்காண தீர்வு எது என்பதை தெளிவாக உணர்ந்து இருக்கிறார்கள் . அனுரா குமரா திசா நாயக யாழில் பேசிய பேச்சு மற்றும் அல்ல தமிழ் தேசிய தலைவர்களின் குடுமி புடி சண்டையை காண சகிக்காமல் தேசிய மக்கள் சக்தியிற்கு வாக்களித்துள்ளனர். என்னை பொறுத்தவரை ஈழத்தமிழர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்துள்ளனர் .

ஒரு மாங்காய் - யாழில் வீரவசனம் பேசிய ஆணுரா தான் சொன்னதை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கியுள்ளனர் . அப்படி இம்முறையும் சிங்களம் தமிழர்களை ஏமாற்றினால் சர்வதேசம் சும்மா இருக்காது என்று நம்பலாம் .
இன்னொரு மாங்காய் - சுமந்திரனின் துரோகத்தை மக்கள் தெளிவாக உணர்ந்து அவரை புறக்கணித்து உள்ளனர் . இதற்கு பின்பாவது அவர் தமிழரசு கட்சியை சிறீதரன் இடம் ஒப்படைக்கவேண்டும் .

ஆகமொத்தத்தில் ஈழத்தமிழர்கள் தெளிவாக தங்கள் வாக்குகளை அளித்துள்ளனர் . தமிழ் நாட்டு தமிழர்களும் ஈழத்தமிழ் மக்களின் தமிழ் தேசிய உணர்வை பார்த்து கற்று கொள்ளவேண்டும் .
விரைவில் தமிழ் தேசியம் ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் அரியணை ஏறும் என்று நம்பிக்கை கொள்வோம் .
---இரா .பிரேம் குமார்


Post a Comment

0 Comments