போனிவர்மாவை மணந்தார் பிரகாஷ்ராஜ்


நடிகர் பிரகாஷ் ராஜ் - டான்ஸ் மாஸ்டர் போனி வர்மா திருமணம் மும்பையில் நடந்தது. டூயட் படத்தில், டைரக்டர் கே.பாலசந்தரால் வில்லனாக அறிமுகம் செய்யப்பட்டவர் பிரகாஷ்ராஜ். கர்நாடகாவை சேர்ந்த இவர், நடிகர் ஆவதற்கு முன்பு நடிகை டிஸ்கோசாந்தி வீட்டில் தங்கியிருந்து வாய்ப்பு தேடி வந்தார். அப்போது இவருக்கும், டிஸ்கோசாந்தியின் தங்கை லலிதகுமாரிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. லலிதகுமாரியும் சில படங்களில் நடித்து இருக்கிறார். பெற்றோர்கள் சம்மதத்துடன் பிரகாஷ்ராஜ் - லலிதகுமாரி திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. ஆண் குழந்தை கீழே விழுந்ததில், தலையில் அடிபட்டு இறந்து விட்டது. அதன்பிறகு, பிரகாஷ்ராஜ்-லலிதகுமாரி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து விவாகரத்து செய்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ், பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை காதலிக்கத் தொடங்கினார். சென்னையிலும், மும்பையிலும் ஒன்றாக ரூம் எடுத்து தங்கும் அளவுக்கு காதலித்து வந்தனர். ஆனால் முதலில் காதல் பற்றிய செய்திகளை மறுத்து வந்த பிரகாஷ் ராஜ் சமீபத்தில் போனியை சென்னைக்கு அழைத்து வந்து, இவர்தான் என் வாழ்க்கையில் வரப்போகிற செல்லம், என்று பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்த நிலையில் பிரகாஷ்ராஜூம், போனிவர்மாவும் மும்பையில் நேற்று (24ம்தேதி) காலை 11 மணிக்கு திருமணம் செய்து கொண்டார்கள். மும்பை மலாட் பகுதியில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கில், இவர்கள் திருமணம் நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க, புரோகிதர்கள் மந்திரம் ஓத, இந்து முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இரண்டு பேரின் நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டார்கள். டைரக்டர்கள் ராதாமோகன், விஜி, குகன், நடிகர் குமரவேல், பட அதிபர் கபார் ஆகியோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

Post a Comment

0 Comments